தனியார் பாங்க் ஒன்றில் மார்க்கெட்டிங் பணிக்கு என்னை அழைக்கிறார்கள். நான் எம்.காம்., படித்துள்ளேன். இதற்குச் சென்றால் என்னால் இதில் வெற்றி பெற முடியுமா? | Kalvimalar - News

தனியார் பாங்க் ஒன்றில் மார்க்கெட்டிங் பணிக்கு என்னை அழைக்கிறார்கள். நான் எம்.காம்., படித்துள்ளேன். இதற்குச் சென்றால் என்னால் இதில் வெற்றி பெற முடியுமா?நவம்பர் 22,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

கடுமையாக வேலையில்லை என்னும் கால கட்டத்திலும் கூட மார்க்கெட்டிங் பணிகளில் கடுமையான ஆள் தேவையிருப்பதை பார்த்திருக்கிறோம். இன்றைய உலகமயமாக்கல் சூழலில் எண்ணற்ற புதிய வேலை வாய்ப்புகள் உருவாகின்றன. இதில் மார்க்கெட்டிங் பணிகள் என்பவை எங்கும் காணப்படுகின்றன.

அதிலும் தனியார் பாங்குகளில் இப்பணிகளுக்கு எப்போதுமே ஆட்கள் தேவைப்படுகிறார்கள். உங்களது தகுதியைப் பற்றிக் கவலைப்படாமல் இப்பணிக்குத் தேவைப்படும் பொறுமை, நிதானம், பேச்சுத் திறன், அலைந்து பிசினஸ் செய்யும் திறன் இருந்தால் இதற்கு நீங்கள் கட்டாயம் செல்லலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us